கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இன்று காலை கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் பல்வேறு கேள்விகளை துண்டுப்பிரசுரம் ஊடாக வெளியிட்டு நடைபெற்று வருகின்றது.
மேலும் குறித்த போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தற்போது இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன் தொடர்ச்சியாக இப்போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த போராட்டம் இடம்பெற்று வரும் பகுதியில் கல்முனை தலைமையக பொலிஸார் பாதுகாப்பினை வழங்கி வருகின்றனர்.இதே போன்று கடந்த 2019 ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக உண்ணாவிரத போராட்டம் பல அரசியல்வாதிகள் பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால் போராட்டத்தை கைவிடும் நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த போராட்டம் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)


