QR சிஸ்டம் வெற்றியளித்துள்ளதாகவும் இதனால் சிரமங்களின்றி எரிபொருளை பெற்றுக்கொண்டு செல்வதாகவும் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதற்காக அரசாங்கத்திற்கும் உரிய அமைச்சுக்கும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் மற்றும் பிரதேச செயலகம் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் விற்பனை நிலையம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறினர்.
ஆலையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் ஊழியர்கள் மிகச்சிறப்பாக செயற்படுகின்றமையையும் மக்கள் சுட்டிக்காட்டினர்.
ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் விற்பனை நிலையத்தில்; பொலிசார் பாதுகாப்பு கடமைகளின்றி நேற்றுமுதல் கியுஆர் பரிசோதனை மூலம் மக்கள் கூட்டமின்றி சுமூகமாகவும் நேர்த்தியான முறையிலும் பெற்றோல் வழங்கப்பட்டது.
ஆயினும் பெற்றோலினை பெறுவதற்காக மிகக்குறைந்தளவு வாகனங்கள் காத்திருந்ததுடன் அமைதியான முறையில் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் உத்தியோகத்தர்களின் கியுஆர் பரிசோதனை உதவியுடன் எரிபொருள் நிரப்பு நிலைய தலைவர் மற்றும் முகாமையாளர் உள்ளிட்ட ஊழியர்களால் பெற்றோல் விநியோகம் சீரான இடம்பெற்றது.
; பெற்றோல் விநியோகம் அமைதியான ஆரம்பமான நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் கூட்டுறவு சங்க ஆணையாளரின் அறிவறுத்தலுக்கு அமைய ஜெனரேட்டர் வசதியுடன் மக்கள் நலன் கருதி பெற்றோல் வழங்க எரிபொருள் நிரப்பு நிலைய நிருவாகம் நடவடிக்கை எடுத்தமை சிறப்பாக அமைந்தது.