வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமம் 2 இன் 3ஆம் வட்டாரத்தில் நேற்றிரவு (05)யானையின் தாக்குதலுக்கு உள்ளான வீடொன்று சேதத்துக்குள்ளாகியுள்ளது.
கணவன் மனைவி ஆகிய இருவரும் வாழ்ந்துவரும் வீடொன்றிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆயினும் அதிஸ்டவசமாக குறித்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை என்பதுடன் அச்சந்தர்ப்பத்தில் வீட்டின் கூரையினை உடைத்த யானை உள்ளே இருந்த நெல்லை உண்டுள்ளதுடன் இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவி;க்கப்படுகின்றது.
வேளாண்மை அறுவடை முடிவடைந்து வரும் இச்சந்தர்ப்பத்தில் யானைகள் தற்போது கிராமத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலை உருவாகியுள்ளது.
இதன்காரணமாக குறித்த கிராமத்தில் வாழும் மக்கள் பீதியடைந்துள்ளதுடன் வருடாந்தம் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆகவே யானையின் தொல்லையில் இருந்து தங்களை பாதுகாக்க அரசாங்கம் நிலையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.