துப்பாக்கிச் சூட்டில் 22 வயது இளைஞர் பலி!!


கம்பஹா கெஹல்பத்தர பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார் என கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.