தேசிய எரிபொருள் அட்டையின் கீழ் QR குறியீடு ஊடாக எரிபொருள் வழங்கும் பரிசோதனை முயற்சி இன்று ஆரம்பமாகவிருந்தது.
எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் உள்ள ஐந்து எரிபொருள் நிலையங்களில் இந்த நடவடிக்கை ஆரமிக்கப்படவிருந்த போதிலும் அது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்று முதல்நாடு முழுவதிலும் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
