மட்டக்களப்பில் வாகன இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம்!!


வாகன பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின்படி எரிபொருளைப் பெறுவதற்கு வாரத்தில் ஏழு நாட்களையும் ஒதுக்குவதற்கு வலுசக்தி அமைச்சு தீர்மானித்து நாட்டின் சில பகுதிகளில் பரீட்சார்த்தமாக அதனை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தினையும் வகுத்துள்ளது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (21) திகதி முதல் வாகனங்களின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலக்கத் தகட்டின் இறுதி இலக்கங்களான 0, 1 மற்றும் 2 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் எனவும், 3, 4 மற்றும் 5 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாகன இலக்கத் தகட்டின் கடைசி எண்களான 6,7,8 மற்றும் 9 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூபா 1500ம், முச்சக்கரவண்டிகளுக்கு ரூபா 2000 க்கும், கார்களுக்கு ரூபா 7000 க்கும் எரிபொருள் நிரப்பப்படுமென சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக காட்சிப்படுத்துப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.