சமுர்த்தி முகாமையாளராக கடமையாற்றி மாவட்ட செயலகத்திற்கு மாற்றம் பெற்றுச் செல்லும் க.அசோக்குமாரின் சேவையினை பாராட்டும் நிகழ்வு

(வி.சுகிர்தகுமார் )

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு தெற்கு வங்கியில் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக சமுர்த்தி முகாமையாளராக கடமையாற்றி மாவட்ட செயலகத்திற்கு மாற்றம் பெற்றுச் செல்லும் க.அசோக்குமாரின் சேவையினை பாராட்டி சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் பல்வேறு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது.

சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவிகளது ஒத்துழைப்போடு அமைப்பின் உறுப்பினர்களின் பங்களிப்போடு இடம்பெற்றுவரும் பாராட்டு நிகழ்வுகளில் பலர் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்து வருகின்றனர்.

இதற்கமைவாக பனங்காடு சின்னப்பனங்காடு மகாசக்தி கிராமம்  கண்ணகிகிராமம் தீவுக்காலை கோளாவில் 01 மற்றும் 02, 03 ஆம் பிரிவுகளில் பாராட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் முகாமையாளருக்கு மக்கள் மலர்மாலை அணிவித்து சிறந்த வரவேற்பை வழங்குவதுடன் நினைவுச்சின்னங்களையும் வழங்கி வைத்து அவரது சேவையினை கௌரவப்படுத்தி வருகின்றனர்.

இடம்பெறுகின்ற நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டுச்சபை தலைவி வலய உதவி முகாமையாளர் வங்கிச்சங்க உதவி முகாமையாளர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்து வருகி;ன்றமை குறிப்பிடத்தக்கது.