மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் புதிய பாடசாலை உதயம்...!!


முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் பெயரில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட அறபா நகரில் பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவருமான அல்ஹாஜ் ZA.நஸீர் அஹமட் மேற்கொண்ட அயராத முயற்சியினால் இவ்வித்தியாலயத்துக்கான அனுமதி கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மறைந்த முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பெயரில் இப்பாடசாலை உருவாகின்றமை சிறப்பம்சமாகும்.

இவ்விடயத்தில் துரிதமாகச்செயற்பட்டு அனுமதியைப் பெற்றுக்கொடுத்தபாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் அவர்களுக்கு கல்குடா பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.