தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தின் 7வது பிறீமியர் லீக் கிறிக்கெட் சுற்றுப்போட்டி



தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தின் 7வது பிறீமியர் லீக் கிறிக்கெட் சுற்றுப்போட்டி

தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தின் 7வது பிறீமியர் லீக் கிறிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வுகள் கழகத் தலைவர் நிரஞ்சன் தலைமையில் 20,21. 02.2022 ஆகிய தினங்களில் நடைபெற்றது.

கிராமத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து கிறிக்கெட் வீரர்களும் ஒன்றிணைந்து Batti Boys, Z. Lion, Green Guys, Golden Flower, Kennedy  என ஐந்து அணிகளாகப் பிரிந்து பலப்பரீட்சை நடத்தினர். இதில் இறுதிச்சுற்றுக்குத் தெரிவான  Green Guys மற்றும் Kennedy ஆகிய இரு அணிகளில்  Kennedy அணி வெற்றிவாகையைச்  சூடிக்கொண்டது.

இடம்பெற்ற இறுதிப் போட்டிகளின் அடிப்படையில் ஆட்ட நாயகனாக கு.புவிப்பிரகாஸ் அவர்களும், சிறந்த துடுப்பாட்ட வீரராக லோ.ஜெகதீஸ் அவர்களும், தொடர் நாயகனாக லோ.ஜெகன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

நிகழ்வின் அதிதிகளாக பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், கிராம உத்தியோகத்தர் திருமதி சுகன்யா அனோஜன்பிரகாஸ் கலந்து கொண்டனர்.