வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாட்டுக்கும் Online கற்றல் கற்பித்தல் செயற்பாட்டுக்கும் பாரிய வேறுபாடு இருந்தும் மாணவர்களின் மனப்பாங்கில் ஆசிரியரின் நேரடி கண்காணிப்பு Online வகுப்புக்களில் கிடைப்பதில்லை. அவ்வாறான ஆசிரியரின் நேரடி கண்காணிப்பில் கற்றலை மேற்கொள்ளும் மாணவர்களின் நிலைப்பாடு எவ்வாறான பிரச்சனைகளை பிற்பட்ட காலத்தில் ஏற்படுத்தும்.
இவ்வாறு பல்வேறு பிரச்சனைகள் இருந்தும் Online வகுப்பா! .....Zoom class ....? என்று கேள்வி கேட்கும் அளவில் பாடசாலை அருகில் இருந்தும், ஆசிரியர் முகம் காணாது புத்தக பையை கூட தொட்டுப்பார்க்க முடியாத குடும்ப மற்றும் சமூக பின்னணியை கொண்ட மாணவர் சமூகத்திக்கு எமது மட்டக்களப்பு கல்வி சமூகம் மற்றும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், புலம்பெயர்ந்து வாழும் உதவும் கரங்கள் என்பன விரைவாக சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களையும் தொடர்வு கொண்டு அந்த மாணவர் சமூகத்திக்கு கல்வியை கற்றுக்கொடுக்க உதவிகளை செய்யுங்கள்.
(முகப்புத்தகத்திலிருந்து)
