அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் கடமைக்கான அழைப்பு தொடர்பாக நிறுவனத் தலைவரிடமிருந்து கடிதம் ஒன்றைப் பெற்று வைத்திருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பயணம் செய்யும் போது அலுவலக அடையாள அட்டைக்கு மேலதிகமாக குறித்த கடிதம் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
இதேவேளை அவசர பயணங்கள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் மிக நெருங்கிய தூரத்தில் இருந்தால் நடந்து செல்ல அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வியாபாரிகள் பொருட்களை வாங்க வசதியாக பொருளாதார மத்திய நிலையங்கள் எதிர்வரும் 30ஆம் 31ஆம் திகதிகளில் திறந்திருக்கும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
