போரதீவுப்பற்றி நேற்று 16 தொற்றாளர்கள் அடையாளம் - அதிகமானோர் ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றுபவர்கள்

(ரஞ்சன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 60அன்டிஜன் பரிசோதனைகளில் 16பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்று அதிகரித்துச்செல்லும் நிலையில் சுகாதார பிரிவினரால் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் நேற்று போரதீவுப்பற்று சுகாதார பிரிவுக்குட்பட்ட மண்டூர்,திக்கோடை,பெரியபோரதீவு,பட்டாபுரம் ஆகிய பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த பகுதிகளில் சுமார் 60பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர்களில் 16பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

கொரனா தொற்றாளர்களில் அதிகமானோர் ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றியவர்கள் என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

போரதீவுப்பற்று சுகாதார பிரிவில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவருவதாகவும் பயணத்தடையினை முழுமையாக அமுல்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.