நிவாரணத்திற்காக வழங்கிய நிதியை பெனர் அடிக்க , போக்குவரத்து செய்ய, உணவு உண்ண என செலவு செய்ய அனுமதி வழங்கியது யார்?
ஏறாவூர் பற்று பிரதேச சபை மற்றும் வர்த்தக சங்கத்தினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வர்த்தகர்கள், பொதுமக்கள், பொது அமைப்புகள், புலம்பெயர் உறவுகள் என பலரிடம் நிவாரண பொருட்கள் சேகரித்ததோடு நிவாரண பொருட்களை வாங்கி கொடுக்க முடியாதவர்கள் நிவாரண பொருட்களை வாங்கி எடுக்குமாறு செங்கலடி வர்த்தக சங்கத்திடம் பணத்தை கொடுத்தனர்.
இன் நிலையில் நிவாரண பொருட்கள் வாங்க கொடுத்த பணத்தில் போக்குவரத்து செலவுகள், வான் எரிபொருள் செலவுகள், சாப்பாட்டு செலவுகள் என அனைத்தையும் செய்துள்ளனர். இவ்வாறு செய்வதற்கு எதற்கு பிரதேச சபை, வர்த்தக சங்கம். இப்படி யார் வேண்டுமானாலும் செய்ய முடியும் தானே.
மக்களும், வர்த்தகர்களும் கொடுத்த பணத்தில் தான் போக்குவரத்து, சாப்பாடு, எரிபொருள் செலவுகள் செய்ய வேண்டும் என்றால். பிரதேச சபை எதற்கு? வர்த்தக சங்க நிர்வாகம் எதற்கு?
பிரதேச சபையால் நிவாரணங்களை கொண்டு கொடுக்க ஒரு வாகனத்தை கூட ஒழுங்கு செய்ய முடியாது என்றால் எதற்காக இந்த நிவாரண சேகரிக்கும் பணியை ஆரம்பித்தனர்.
மறுபுறம் போக்குவரத்திற்கும் தங்களது செலவுக்கும் தனியாக நிதியை செலவு செய்ய முடியாதவர்கள், தங்களது சொந்த பணத்தை கூய செலவு செய்ய முடியாத வர்த்தக சங்கம் நிர்வாகம் எதற்காக ?
மக்கள் நிவாரணத்திற்கு வழங்கிய பணம் தவறான முறையில் செலவு செய்யப்பட்டுள்ளது.
லுனுகலைக்கு ஒரு லொரிக்கு 45000 ரூபாய் கொடுத்துள்ளார்கள் இது அநியாயம் இல்லையா ? அவர்களது சொந்த பணமாக இருந்தால் இவ்வாறு செலவு செய்திருப்பார்களா?
எனவே உடனடியாக போக்குவரத்து மற்றும் சாப்பாடு உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்குமான பணத்தை பிரதேச சபை , வர்த்தக சங்க நிர்வாகத்தினர் மீள வழங்க வேண்டும்.
பணத்தை சேகரித்து உரிய பணத்திற்கு நிவாரணங்களை வாங்கி மக்களுக்கு கொடுக்க வேண்டும்.
காசு அறவீடு செய்யப்பட்டது முதல் செலவு செய்யப்பட்டது வரை விசாரணை நடாத்த வேண்டும் .
மக்களிடம் என்ன சொல்லி பணம் வாங்கினீர்களோ அதை முதலில் செய்யுங்கள்.
போக்குவரத்துக்கு உங்களிடம் மக்கள் பணத்தை வழங்கவில்லை.
