48 கொரனா தொற்றாளர்கள் - இரு மரணங்கள் -அச்சுறுத்தும் மட்டக்களப்பு

பயணத்தடை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முடங்கியுள்ள நிலையிமையினை காணமுடிவதுடன் படையினரும் பொலிஸாரும் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

கடந்த மூன்று தினங்களாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் பயணத்தடை காரணமாக இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பயணத்தடை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 48 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இரு மரணங்களும் இடம்பெற்றுள்ளன.