குறுகிய கால போக்குவரத்து கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியாது என ஹொங்கொங் பல்கலைக்கழக பேராசிரியர் மலிக் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
14 நாள் போக்குவரத்து கட்டுப்பாடுகளிற்கான விஞ்ஞான ரீதியிலான அவசியத்தை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டின் அனைத்து மாவட்டங் களிலும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட வர்கள் உள்ளதால் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் நடுப்பகுதியில் இந்தக் கட்டுப்பாடுகளை விதித்திருந் தால் அவற்றால் பயன் ஏற்பட்டிருக்கும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் போக்குவரத்து தடையின் பின்னரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதனை பரப்ப முடியும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
ஒருவர் கொரோனாவினால் தொற்றிற்குள்ளாகி நோய் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு ஐந்து நாட்கள் எடுக்கலாம் எனத் தெரிவித்துள்ள பேராசிரியர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது வீட்டில் உள்ள ஒருவருக்கு தொற்றைப் பரப்பினால் வீட்டில் உள்ளவர்கள் அறிகுறிகளை வெளிப்படுத்துவதற்கு ஐந்து நாட்கள் எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அவர்களை இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மூன்று நாள் முடக்கல் என்பது கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் எந்தப் பயனையும் ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
