பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் கொரொனா நோயின் தாக்கம் அகல வேண்டும் என்று விசேட பூஜை




(புருசோத்)

பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள கொடிய நோயான கொரொனா நோயின் தாக்கம் ஆனது எமது நாட்டை விட்டும் எனது மக்களை விட்டும் அகல வேண்டும் என்று விசேட பூஜை மற்றும் யாகம் என்பன  (21) அன்று இடம்பெற்றது.

பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வண்ணக்கர் மூ.மன்மதராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இதில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த பூஜையானது பக்தர்களை உள்வாங்காமல் நிர்வாகிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இவ் விசேட பூஜை இடம் பெற்றது என்பது விசேட அம்சமாகும். 

இவ் பூஜையானது பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவாகமரெத்தினா சிவா ஸ்ரீ இரா.கு.நடேசடுணஸ்காந்த குருக்கள் அவர்களினால் இடம் பெற்றது.