24.04.2021 இன்றைய தினம் "வளர்ச்சியின் உச்ச நிலை கல்வி"எனும் தொனிப்பொருளில் க. பொ. த சாதாரண தர மாணவர்களுக்கானஆங்கில கையேடுகள் வழங்கும் நிகழ்வு மட்/மமே கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண மிஷன் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது. இன் நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கோட்டத்தின் 12 பாடசாலைகளுக்குமான ஆங்கில பாடத்தில் கூடிய அடைவு மட்டத்தினை உயர்த்துவதற்கான EASY ENGLISH PUBLISHED BY MINISTRY OF EDUCATION எனும் பெயரில் ஆங்கில கையேடுகள் உதயகுமார் கல்வி மையத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் அம்மணி அவர்களும்,மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.மூ. உதயகுமாரன்,சேவைக்கால ஆங்கில ஆலோசகர் திரு.வே.திவாகரன்,அக்னிச் சிறகுகள் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளரும்,உதயகுமார் கல்வி மையத்தின் செயலாளருமான திரு.ம.ஜெயக்கொடி,உதயகுமார் கல்வி மையத்தின் நிர்வாகிகள்,இணைப்பாளர்கள்,12 பாடசாலைகளின் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அத்துடன் கையேடுகளை ம/மமே/வலயக் கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம் அம்மணி,மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.மூ.உதயகுமாரன்,உதயகுமார் கல்வி மையத்தின் செயலாளர் திரு.ம.ஜெயக்கொடி ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் இனிதே நிறைவு பெற்றது.