பாரதி வீதியில் சிறுமியின் கழுத்தில் இருந்த மாலையை பறித்து சென்ற திருடன் -சிசிரிவி காட்சியில் சிக்கிய நபர்

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவின் பாரதி வீதியில் சென்றவரினால் சிறுமி ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க மாலை அறுத்துச்செல்லப்பட்டது தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியினை நாடியுள்ளனர்.

நேற்று மாலை பாரதி வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஓருவரின் தங்கமாலையை துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் அறுத்துச்சென்றுள்ளார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் சிசிரிவி காட்சிகளைக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை அடையாளம் கண்டவர்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.