வெள்ளத்தினால் போரதீவுப்பற்றின் பல பகுதிகளில் போக்குவரத்துகள் பாதிப்பு


(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டு;ளளன.

நவக்கிரி அனைகட்டின் நீர் மட்டம் வான் கதவுக்கு மேல்1 1ஃ2  அடி நீர் பாய்கின்றமையினால் நேற்று இரவு இரண்டு வான்கதவுகள் 3 அடி திறக்கப்பட்டுள்ளன. 

இதன்காரணமாக வெல்லாவெளி- மண்டூர் பிரதான வீதி, 35 ஆம்  கிராமம் உகனைக்கு செல்லும் பிரதான வீதி, சின்னவத்தை  செல்லும் ராணமடு வீதி,காக்காச்சிவட்டை யானைகட்டிய வெளிக்கு செல்லும் பிரதான  வீதி ஆகிய வீதிகள் ஊடாக வெள்ள நீர்பாய்வதன் காரணமாக போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் காரணமாக வெல்லாவெளி,மண்டூர் சின்னவத்தை, ஆணை கட்டியவெளி,சமூளையடிவட்டை,34ம் கிராமம், 35ம் கிராமம்  ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய செய்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

பொறுகாமம் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக வெல்லாவெளி –கோவில்போரதீவு வீதியில் வெள்ள நீர் பாய்ந்து செல்வதை காணமுடிகின்றது.

மழை காரணமாக போரதீவுற்று பிரதேச செயலாளர் பிரிவில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.