மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் 12 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் அவற்றில் 11பேர் சுகாதார துறையினை சேர்ந்தவர்கள் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
மட்;டக்களப்பு மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகளில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 387பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் இவர்களில் 132பேர் சுகமடைந்து வீடுசென்றுள்ளதாகவும் 255பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தாக்கத்தினால் நான்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
