மட்டக்களப்பு நாவலடியில் உள்ள சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தில் பல்வேறு தொழில்கல்விகள் மற்றும் வாழ்க்கை முறை கல்விகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன்கீழ் நீச்சல் பயிற்சிகளும் வழங்கப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டம் இயற்கை பேரிட ர்கொண்ட மாவட்டமாக காணப்படும் நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் தொடர்ச்சியாக இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இந்த பயிற்சிகளை அரச உத்தியோகத்தர்கள்,மாணவர்கள் பெற்றுவருகின்றனர்.
இதன்கீழ் வெள்ள அனர்த்ததினால் பெருமளவு பாதிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்,உதவி பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர்கள்,உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்துவந்த மாணவர்களுக்கு குறுகிய கால நீச்சல் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு நீச்சல் பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு நாவலடியில் உள்ள சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு நாவலடியில் உள்ள சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் உதவி பணிப்பாளர் அருள்சிவம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்;டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.அருள்ராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ரங்கராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
