லண்டன் பழுகாமப் பரம்பரை ஒன்றியம் ஊடாக வாழ்வாதார உதவி


(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம் பகுதியில் நீண்டகாலமாக சமூக செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் லண்டன் பழுகாமப் பரம்பரை ஒன்றியம் ஊடாக பல்வேறு வாழ்வாதார  உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இன்று திருப்பழுகாமம் பரம்பரை ஒன்றியத்தினால் வாழ்வாத உதவித்திட்டம்   வழங்கும் பணிகள் இந்த ஆண்டில் ஆரம்பித்துவைக்கப்பட்டம்.

 அந்தவகையில் லண்டனில் வாழ்ந்து வரும்  பழுகாமப் பரம்பரை ஒன்றியம் அமைப்பின் தலைவர் காசுபதி பெஞ்சமின் பாலா அவர்களிடம்  கேட்டுக்கொண்டதன் பேரில் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பழுகாம் மாவேற்குடா கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் சக்கரப் பிள்ளை ரஞ்சினி அவர்களுக்கு  மா மற்றும் மிளகாய் அரைக்கும் இயந்திரசாதனங்கள் வழங்கப்பட்டது.

இதனை வழங்கும் நிகழ்வில் பழுகாமப் பரம்பரை ஒன்றியம் அமைப்பின் பழுகாமக்கிளை நிருவாக சபை  உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மிகவும் வறுமை நிலையில் குடும்பத்தினை தலைமைதாங்கிவரும் பெண்னொருவருக்கு இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.