கிழக்கில் அதிகரிக்கும் தொற்றாளர்கள் -களுவாஞ்சிகுடியிலும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தொற்று உறுதி


கிழக்கு மாகாணத்தில் கொரனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 332ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் கொரனா தொற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் அடையாளம் காணப்பட்டதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இதேவேளை கிழக்கின் அக்கரைபற்று பகுதியில் தொற்றாளர்களின் தொகை அதிகரித்துவருவதாக மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அக்கரைப்பற்று பகுதியில் 11பேரும் அட்டாளைச்சேனை பகுதியில் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்களின் எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளது.

இதேபோன்று களுவாஞ்சிகுடியில் பொலிஸ் உத்தியோகத்தரும் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 332ஆக அதிகரித்துள்ளது.