செட்டிபாளையம் அருள்மிகு சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் ஆலய கொடியேற்றம்


கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு செட்டிபாளையம் அருள்மிகு செட்டிபாளையம் அருள்மிகு சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இந்தியாவில் இருந்து வருகைதந்த  ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமியால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலயம் இப்பகுதியில் அற்புதங்கள் நிறைந்த ஆலயமாகவும் பிரசித்திபெற்ற சிவாலயமாகவும் இருந்துவருகின்றது.

இன்று அதிகாலை காலை செட்டிபாளையம் பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

ஆலயத்தில் விசேட ஹோமம் நடைபெற்றதுடன் கொடிச்சீலைக்கும் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள சிவனுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று ஊர்வலமாக கொடித்தம்பத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அதனை தொடர்ந்து கொடிச்சீலையும்ஊர்வலமாக கொடித்தம்பத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

இதன்போது கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று வேதபராயணம் முழங்க,நாத மேள இசையுடன் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் மஹோற்சவ கொடியேற்றத்திருவிழா நடாத்தப்பட்டது.

பத்து தினங்கள் நடைபெறும் ஆலய மஹோற்சவத்தில் தினமும் தம்பபூஜை,வசந்த மண்டப பூஜை,சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெறவுள்ளதுடன் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சப்புறத்திருவிழாவும் 28ஆம் திகதி வேட்டைத்திருவிழாவும் 30ஆம் திகதி சமுத்திர தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.