பிள்ளையானுக்கு வரவேற்பளித்த ஆதரவாளர்கள் -பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்


பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு நகரில் ஆதரவாளர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது மட்டக்கள்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சந்தேக நபர்கள் அச்சுறுத்தப்பட்டு குற்ற வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இன்று சந்திகாந்தனின் வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நடைபெற்ற நிலையில் பிணைகோரப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் திணைக்களம் ஆட்சேபணை தெரிவிக்காத காரணத்தினால் சந்திரகாந்தன் உட்பட ஐந்து பேருக்கும் பிணை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சந்திரகாந்தனின் ஆதரவாளர்களினால் மட்டக்களப்பு நகரில் பட்டாசுகள் கொழுத்தப்பட்டு மகிழ்ச்சி ஆரவாரம் முன்னெடுக்கப்பட்டது.