மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரை பகுதியில் அடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
பெரியகல்லாறு பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் இந்த சடலம் கரையொதுங்கியது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 60வயது மதிக்கத்தக்க பெண்னொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.
ஸ்தலத்திற்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
நீதிவான் நீதிமன்ற அனுமதியைப்பெற்று சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

.jpeg)
.jpeg)

