தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்துவதற்கு முற்படுவதாகவும் அதற்கான தடையுத்தரவினை வழங்குமாறும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தடையுத்தரவு ஒன்றுபெறப்பட்டுள்ளது.
புதுத்தொல்லைகளை தவிர்த்தல்,தனித்தல் என்கின்ற குற்றவியல் சட்டக்கோவையின் 106:01 பிரிவின் கீழ் இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனுக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவினை நீக்க கோரி இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.கே.சுமந்திரன்,சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத்,சட்டத்தரணி சயந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
குறித்த வழக்கினை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.பொலிஸார் குறித்த நிகழ்வு விடுதலைப்புலிகளை மீளஉருவாக்க மேற்கொள்ளப்படும் செயற்பாடு வாதங்களை முன்வைத்தனர்.
இது தொடர்பில் ஆராய்ந்த நீதிபதி ரி.றிஸ்வான் குறித்த வழக்கினை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.