ஜிஹாத்தின் ஆயுதங்களை ஹிஸ்புல்லா ஒப்படைக்கப்படவில்லை – முன்னாள் டி.ஐ.ஜி.


முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எம்ஹிஸ்புல்லலாவினால் நடத்தப்பட்ட கிழக்கு ஜிஹாத் அமைப்பின் ஆயுதங்கள் இதுவரை மீள அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று அழைக்கப்பட்டிருந்த ஒய்வு பெற்ற முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் எடிசன் ஜயதிலக்க இவ்வாறு சாட்சியம் அளித்துள்ளார்.

அவர் தனது சாட்சியத்தில்:


கிழக்கு மாகாணத்தில் இயங்கிய ஆயுதம் ஏந்திய 18 முஸ்லிம் அமைப்புகளில் ஒன்று ஹிஸ்புல்லாவினால் இயக்கப்பட்டது. அதுதான் கிழக்கு ஜிஹாத்  அமைப்பு. இவர்கள் வசம் இருந்த ஆயுதங்கள் மற்றும் கைகுண்டுகள் இதுவரை அரசிடமோ அல்லது வேறு யாரிடமோ ஒப்படைக்கப்படவில்லை.

ஏற்கனவே கிழக்கில் இருந்த 18  ஜிஹாத் அமைப்புகளைத் தம் வசமுள்ள ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோதும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினர் இதுவரை ஆயுதங்களை  ஒப்படைக்கவில்லை-என்று கூறினார்.

(நன்றி:-ஈழநாடு)