கடை உரிமையாளர்களின் காலடிக்குச் சென்று நோயெதிர்ப்பு பானம் வழங்கி வைப்பு


பைஷல் இஸ்மாயில் 

அக்கரைப்பற்று பொதுச் சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்றின் நிலைமையை கருத்திற் கொண்டு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள சில்லறைக் கடை உரிமையாளர்களுக்கு நோயெதிர்ப்பு பானம் இன்று (27) வழங்கி வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி எம்.பி.எம்.றஜீஸ் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு சில்லறைக்கடை உரிமையாளர்களின் காலடிகளுக்குச் சென்று தொற்றுநோய் நோயெதிர்ப்பு பானம் வழங்கி வைக்கப்பட்டது. 

தொற்று நோய் வைத்திய பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் எஸ்.எம்.றிஷாதினால் நோயெதிர்ப்பு பானத்தை எவ்வாறு அருந்துவது பற்றிய தெளிவான விளக்கத்தையும் அதன் விழிப்புணர்வையும் கடை உரிமையாளர்களுக்கு வழங்கி வைத்தார்.

இந்த நடமாடும் நடவடிக்கையில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் இச்சேவையில் ஈடுபட்டனர்.