போரதீவுப்பற்றில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் மும்முரம்


(ரஞ்சன்)

மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பொது இடங்களுக்கு தொடர்ந்து கிருமி தொற்று நீக்கம் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொரனா தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில்  பிரதேச சபை ஊழியர்களினால்  பல இடங்களுக்கு தொற்று நீக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று பழுகாமம் பிரதேச வைத்தியசாலை அரச திணைக்களங்கள் பொதுமக்கள் கூடும் வங்கிகள் பால் சேகரிக்கும் நிலையம் மண்டூர்  கடைகள்  தபாலகங்கள் ஆகியவற்றுக்கு தொற்று நீக்கம் செய்யப்படுள்ளன.

போரதீவுப்பற்று  பிரதேசத்தில் கொரனா தொற்று ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து  கொரோனா நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கோடு பிரதேச சபை தவிசாளர் யோ. ரஜினி அவர்களின்  தலைமையில் இந்த தொற்று நீக்கும் செயற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

அது மட்டுமன்றி கொரனா அச்சுறுத்தல் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்,தொழிச்சாலைகளில் இருந்து வந்தவர்கள்   பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பட்டாபுரம் முனைத்தீவு  பழுகாமம் ஆகிய கிராமங்களுக்கு போரதீவுப்பற்று பிரதேசசபையினால் குடிநீர் தாங்கி வைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன.