இவர் கொழும்பில் இருந்துவந்த நிலையில் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர் பயணம் செய்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் பெறும் நடவடிக்கைகள் முன்nடுக்கப்பட்டள்ளதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவரை சந்தித்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
அத்துடன் அவர் கொழும்பில் இருந்துவந்து தங்கியிருந்த இடம் மற்றும் அவர் சென்ற இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அங்குள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் முன்னெடுத்துவருகின்றனர்.
