(செங்கலடி நிருபர் சுபோ)
மட்டக்களப்பு - செங்கலடி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேச சபையின் சரியான திட்டமிடல் இல்லாத அசமந்தப் போக்குத்தனமான சேவையினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கடந்து சில வாரங்களுக்கு முன் ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேசயினால் செங்கலடி பொதுச் சந்தையினுள் கிரவல் மண் போடப்பட்டதாகவும்.
பிரதேச சபையில் இருந்து பிரதேச சபையின் தவிசாளர் உட்பட்ட குழுவினர் சந்தையினை கடந்த சில வாரங்களுக்கு முன் பார்வையிட்டு சென்று கிரவள் மண் பரவியதாகவும்.
அதன் பின் உரிய பராமரிப்பு இன்மையாலும் தற்போது பெய்துவரும் தொடர்மழையாலும் குறித்த பகுதி சேரும் சகுதியாகவும் இருப்பதால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக மக்கள் கவலை தொரிவிக்கின்றனர்.
செங்கலடி பிரதேச சபை இப்பிரச்சினை தொடர்பில் கவணம் செலுத்தி தமக்கான தீர்வை பெற்றுத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
