களுதாவளையில் கொரனா தொற்றாளர் –மட்டக்களப்பு மாவட்டம் ஆபத்தில்

மட்டக்களப்பு,களுதாவளை பகுதியில் ஒருவர் கொரனா தொற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி கொழும்பில் இருந்துவந்துள்ளதாகவும் நேற்று அவர் பீசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையிலேயே இன்று அவர் கொரனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

அவர் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்துள்ளதாகவும் சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் குறித்த பகுதி முடக்கப்பட்டு அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.