(ரஞ்சன்)
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி இன்று அதிகாலை மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றும் டாக்டர் கிருஸ்ணகுமார் அவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு களுதாவளையில் இனங்காணப்பட்ட கொரனா தொற்றாளரை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு கல்முனை,பாண்டிருப்பில் உள்ள அவரது வீடு சென்றவர் மாரடைப்பு ஏற்பட்டவேளையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களாக களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளி சுகாதார பிரிவுகளில் கொரனா அச்சுறுத்தல் நிலவிவரும் நிலையில் கடுமையான செயற்பாடுகளில் முன்னெடுத்திருந்த நிலையல் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
