கிழக்கில் 12 தனிமைப்படுத்தல் நிலையங்கள்


கொவிட் 19 தொற்று சந்தேக நபர்களை தனிமைப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் 12 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு;ள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்
.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தினை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கொரனா தொற்று அதிகரிக்கும்போது அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய கொரனா செயலணியுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அடுத்தகட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்தார்.

கொரனா தொற்று பாதிப்பு உள்ள பகுதிகளில் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கும் தீர்மானத்தினை தேசிய கொரனா செயலணியே மேற்கொள்ளும் என இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீண்ட நேரம் வெளியில் ஊடகவியலாளர்கள் நிற்கவேண்டிய நிலையேற்பட்டது.