வறுமை நிலையில் மக்களின் தேவைப்பாடுகளை பூர்த்திசெய்யும் வகையில் செயற்படும் சுவிஸ் உதயம் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு சமூக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்னற.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள மிகவும் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தினை நோக்காக கொண்டுசெயற்படும் சுவிஸ் உதயம் அமைப்பினால் பல்வேறு வாழ்வாதார மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று சுவிஸ் உதயம் அமைப்பு 16வது ஆண்டினை நிவர்த்திசெய்யும் வகையிலான நிகழ்வினை கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை மேற்கு பகுதியில் உள்ள வறிய மக்களுக்கான குடிநீர் திட்டங்கள் இன்று அமைத்து வழங்கிவைக்கப்பட்டன.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண செயலாளருமான திருமதி செல்வி மனோகர்,மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவி திருமதி ரோமிலா செங்கமலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இன்றைய தினம் ஐந்து வறிய குடும்பங்களுக்கு இந்த நீர்வழங்கல் திட்டங்கள் சுவிஸ் உதயம் அமைப்பினால் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டன.
சுவிஸ் உதயம் அமைப்பின் 16வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அமைப்பின் தலைவர் சுதர்சன் லிங்கத்தின் பிள்ளைகளினால் இந்த நீர்விநியோக திட்டத்திற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.