திருப்பழுகாமத்தில் இரத்ததானமுகாம்

(ரஞ்சன்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவிவரும் இரத்த பற்றாக்குறையினை பூர்த்திசெய்யும் வகையில் பொது அமைப்புகள்,இளைஞர்களினால் பல்வேறு பகுதிகளிலும் இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டுவருகின்றது.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்தப்பற்றாக்குறை பாரியளவில் நிலவிவருகின்றது.
இதனடிப்படையில் பல்வேறு பகுதிகளிலும் இரத்தானமுகாம் நடாத்தப்பட்டுவருகின்றது.
திருப்பழுகாமம் இளைஞர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று இன்று திருப்பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து திருப்பழுகாமம் இளைஞர்களினால் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.
இந்த இரத்ததான முகாமில் பெருமளவான இளைஞர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியனும் கலந்துகொண்டு இரத்தம் வழங்கினார்.