
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் 67692 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தினைப்பெற்றுள்ளது.
இந்த வாக்குகளில் 61143 வாக்குகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்றவர் என்ற சாதனையினை நிலைநாட்டியுள்ளதுடன் சிறைச்சாலையில் இருந்து தனது ஜனநாயக கடமையினை நிறைவேற்றாமல் இந்தளவு விருப்பு வாக்குகளைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.