கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்வியை தழுவிய தமிழ் தேசிய கூட்டமைப்பு –வெற்றிக்கனி பறித்த பிள்ளையான்

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளின் உத்தியோகபூர்வமற்ற தகவலிகன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஓரு ஆசனத்தினையும் பொதுஜன பெரமுன ஒரு ஆசனத்தினையும் ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளது.

இன்று காலை முதல் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மற்றும் மகாஜனகல்லூரி என்பனவற்றில் வாக்கெண்ணும் பணிகள் நடைபெற்றுவந்தன.
இந்த நிலையல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 79460 வாக்குகளும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 67692 வாக்குகளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34428 வாக்குகளும் பொதுஜன பெரமுனவின் 33424 வாக்குகளும் பெறப்பட்டு இந்த ஆசனங்கள் பெறப்பட்டுள்ளன.
துமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான வாக்கு வீழ்ச்சியை எதிர்கொண்டதுடன் ஒரு ஆசனத்தினையும் இழந்துள்ளது.