இரண்டு தினங்களாக மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளதுடன் மக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை தொடக்கம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடிக்கும் வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
குறிப்பாக இன்று வர்த்தக நிலையங்களில் சனக்கூட்டம் காணப்பட்டதுடன் சுகாதார நடைமுறைகளை பேணிய வகையில் மக்கள் தமது அன்றாட கடமைகளை நிறைவேற்றியதை காணமுடிந்தது.
சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடி நின்றதையும் அவதானிக்கமுடிந்ததுடன் சிலர் முககக்கவசம் அணியாமல் தமது கடமைகளை நிறைவேற்றுவதை காணக்கூடியதாகயிருந்தது.
போக்குவரத்தினை பொறுத்தவரையில் அரச போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்துகள் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் போக்குவரத்து செய்யும் மக்களின் தொகை குறைவானதாகவே காணப்பட்டது.
பொலிஸாரும் படையினரும் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் சுகாதார நடைமுறைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் முககவசம் அணியாதவர்களுக்கு அதனை அணியவைக்கும் நடவடிக்கையினையும் முன்னெடுத்தனர்.