தனியார் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் தனிப்படுத்தல் செய்யப்படுவார்கள் என மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் க.சித்திரவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை இயங்கச்செய்வது குறித்தான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
கொரனா அச்சுறுத்தலுக்கு பின்பாக மூடப்பட்டுள்ள தனியார் கல்வி நிலையங்களை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மீண்டும் திறப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.
இதன்கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களை திறப்பது குறித்து ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் க.சித்திரவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் கே.கிரிசுதன்,மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் சிவராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள்,ஆசிரியர்கள்,முகாமையாளர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது கொரனா அச்சுறுத்தலின் நிலைமைகள் அதன் தாக்கங்கள் தொடர்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டதுடன் அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டன.