வீதியோர வியாபாரிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்காலிக இடங்களில் இருந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கைகொடுக்கும் நடவடிக்கைகளை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு முன்னெடுத்துள்ளது.

வீதியோரங்களில் தகரக் கொட்டகைகளில் வைத்து சர்பத், கிழங்கு, வடை, தேனீர், உள்ளிட்ட தமது சிறிய வாழ்தாதாரத்தை மேற்கொண்டு வந்தவர்களுக்கு வடிவமைக்கப்பட்ட நிரந்தர பெட்டிக்கடைகளை அமைத்து வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம், துறைநீலாவணை, கோவில்போரதீவு, மண்டூர் ஆகிய பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நால்வருக்கு இவ்வாறு பெட்டிக்கடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

வீதி ஓரங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகைகளில் இதுவரை காலமும் சிறிய வாழ்வாதாரத்தை மேற்கொண்டு தமது வாழ்க்கையினை கொண்டுநடாத்தியவர்கள் தமக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் இன்று தமக்கு நிரந்தர வீதியோர பெட்டிக்கடை வடிவமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளமையானது மிகுந்த சந்தேசத்தை அளிப்பதாகவும், இதனால் தமது வாழ்வாதரம் மேலோங்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

இராசமாணிக்கம் மக்கள்  அமைப்பு நீண்டகாலமாக வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.