போரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை

(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் சட்டதிட்டங்களை மீறி செயற்படும் மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இடம் பெறும் மண்ணகழ்வு நடவடிக்கை தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேசசபை ஒன்று கூடல் மண்டபத்தில் போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி தலமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

போரதீவுப் பற்று பிரதேசபை மண் அகழ்வு சம்பந்தமான கலந்துரையாடலின் போது போரதீவுப்பற்று பிரதேச செயலக உதவிச் செயலாளர் புவனேந்திரராஜா. களுவாஞ்சிகுடி உதவிப் பொலீஸ் பொறுப்பதிகாரி, வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி. களுவாஞ்சிகுடி விசேட விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி. பாலையடி வட்டை இரானுவப் பொறுப்பதிகாரி  மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர்  உத்தியோகஸ்தர்கள் கலந்து கொன்டனர்.
இந்த கூட்டத்தில் மண் அகழ்வில் ஈடுபடுவோர்,மண் விற்பனையில் ஈடுபடுவோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மண்ணகல்வின்போது முன்னெடுக்கப்படவேண்டிய வழிமுறைகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பகுதிக்குள் மண் அனுமதிபெற்று ஏற்றுகின்றவர்கள் பாடசாலை நேரங்களில் மாணவர்களுக்கும் பாத சாரதிகளுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் மண் அகழ்வு மேற் கொள்ளும் அவசியம் குறித்து போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளரினால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக  கண்ணபும்  பாடசாலை வீதி மண் அகழ்வு மேற் கொன்டு முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் மற்றும் கனரக வாகனத்தினால் புழூதி தூசி என்பவற்றால்  பாடசாலையில் மாணவர்கள் கற்றல் நடவடிக்கை மேற் கொள்வதில் சிரமப்படுவது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.

அரச சட்டதிட்டத்துக்கு அமைவாக பதிவு செய்து  நீங்கள் அதற்கான அனுமதியினை பெற்று உரிய இடத்தில் மண்அகழ்வு மோற்கொள்ளலாம்.

கொரொனா நோயினால் தற்போது பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் போது பாடசாலை முடியும் போதும் கனரக வாகனங்களை  ஓடுவதனை நிறுத்த வேன்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றும் நடவடிக்கைகளை விசேட அதிரடிப்படை,பொலீஸ்,இராணுவம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தடுத்துநிறுத்துவது குறித்தும் கருத்துகள் முன்வைப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராச்சி மன்ற தினைக்களங்களுக்கான மண் அகழ்வு சம்பந்தமான வர்த்கமானி அறிக்கையின் படி 1கீப் ஆற்று மண் 50ரூபாயும்  1கீப் கல் மண் 50ரூபாயும் 1கீப் சாதாரண மண் 50ரூபாயும்  1கீப் உடைத்த கல் 75ரூபாயும்  1கீப் வண்டி மண் 10ரூபாயுமாக வரி வழங்கவேண்டும் என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றினை வசூலிப்பது குறித்தும் தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.

04ஃ03ஃ2020 திகதி மாவட்ட மட்ட கூட்ட தீர்மானத்துக்கு ஏற்ப
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இடங்களில் மாத்திரம் மண்அகழ்வு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி
சந்தனமடு ஆறு  வீர வெட்டு ஆற்று மயிலுறுப்பான் ஆகிய பகுதிகளே தீர்மானிக்கப்பட்டதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மணல் அகழ்வுக்கு விண்ணப்பிக்கின்றவர்கள் 1. தொழில் இல்லாமல் இருக்கின்றவர்கள் 2.மணல் அகழ்வு இடத்திற்கு பக்கத்தில் உள்ளவர்கள் 3.மட்டக்களப்பு மாவட்டமாக இருக்க வேன்டும். அவ்வாறு உள்ளவர்களுக்கு சிபார்சி செய்யப்படும் 1மாதத்துக்கு 35 கீப் மண் மட்டும் ஏற்றஅனுமதி வழங்கப்படும் .அத்தோடு  சொந்த வயல் கானி திருத்தும் போது எந்த அனுமதியும் எடுக்க தேவல்லை எனவும்  வேறு இடத்துக்கு மண் கொண்டு செல்வதாக இருந்தால் உரிய முறையில் அனுமதிப்பத்திரம் எடுக்க வேன்டும் எனவும் போரதீவுப் பற்று பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் இங்கு தெரிவித்தார்.

கனரக மன் ஏற்றுகின்றவர்கள் பொலீத்தின் போட்டு மண்ணை மூட வேன்டும்  வாகன சாரதி உதவியாளர் இருவரும் முகக்கவசம் அனிய வேன்டும் எனவும் மாணவர்களுக்கு பொதுமக்களுக்கும் வீதி விபத்து ஏற்படாத வண்ணம் ஒட வேன்டும் எனவும் இங்கு பொலிஸ் அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.

உரிய வகையில் அனுமதி எடுத்து மண் கொள்வனவு செய்ய வேன்டும் அவ்வாறு செயப்படாத வர்களை சட்டரீதியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு மண் அகழ்வில் ஈடுபடுகின்றவர்களுடன் கலந்தாலோசனை மேற் கொன்டு  இறுதியான முடிவு எடுக்கப்பட்டு கூட்டம் சுமுகமானதாக நிறைவடைந்தது.