இலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒப்பந்தகாரர் ஒருவரிடம் மூன்று இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்க முற்பட்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்துவந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.