மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் பேராலயத்தின்திருவெம்பாவை தீர்த்த உச்சவம்

 

இலங்கையில் மிக உயரமான 64 அடி பிள்ளையாரை சுதைவிக்கிரகமான கொண்ட மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் பேராலயத்தின் திருவெம்பாவை தீர்த்த உச்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கலந்து கொண்டனர். அந்த வகையில் கடந்த 01.01.2020 அன்று ஆரம்பமாகிய திருவெம்பாவை விரதமானது ஆறாம்நாள் பிட்டுக்கு மண்சுமந்து உற்சவமும் நேற்று(09.01.2018) வியாழக்கிழமை திருவாசக முற்றோதலும் அதனை தொடர்ந்து நடராஜ பெருமானுக்கும் சிவகாமி அம்பாளிற்கும் நான்கு ஜாம பூஜையும் அதிகாலையில் ஆருத்திரா தர்சனமும் இடம் பெற்றது.



திருவெம்பாவை கலப்பகுதியில் அதிகாலையில் தேற்றாத்தீவு தெருக்கள் தோறும் திருப்பள்ளி எழுச்சி பாடப்பட்டது.இன்று அதிகாலை ஆலயத்தில் திருப்பொன்சுண்ணம் இடிக்கப்பட்டு .வசந்த மண்டப பூஜை இடம் பெற்று மாணிக்வாசகர் கொம்புச்ந்திப்பிள்ளையார் நடராஜ பெருமானுக்கும் சிவகாமி அம்பாள் வள்ளி தெய்வானை சமேத முருக பெருமான் ஆகியோர் இந்து சமுத்திரத்தில் தீர்த்த உச்சவத்திற்காக புறப்படனர்.

சுவாமி இந்து சமுத்திரத்தை சென்றடைந்தவுடன் திருவெம்பாவை ஒதப்பட்டு திருப்பொன்சுண்ணம் அடியார்களுக்கு  வழங்கப்படன் பொது மக்கள் உறவினர் நண்பர்களிடையே மஞ்சள் ஊற்றி மிகிழ்ந்தனர். பின் இந்து சமுத்திரத்தில் தீர்த்த இடம் பெற்றது. பின்னர் சுவாமி தேற்றாத்தீவு ஶ்ரீ வட பத்திரகாளி அம்பாள் ஆலயத்தை வந்தடைந்து. பின் வீதியுலா வருகை தந்ததை தொடர்ந்து ஆலயத்தை வந்தடைந்து.ஆலயத்தில் திருபொன்னுஞ்சல் பாடப்பட்டு விசேட பூஜை நடைபெற்று பெற்றது.