செங்கலடி பிரதேச சபையினால் விசேடதேவையுடையவர்களுக்கு உதவி


செங்கலடி நிருபர் சுபா


மட்டக்களப்பு செங்கலடி பிரதே செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட தேவையுடைய நிலையில் உள்ளவர்களுக்கு தேவையான பொருட்கள்  செங்கலடி பிரதேச சபையினால் வழங்கப்பட்டன. 

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் விசேட தேவையுடைய நிலையில் அதிகளவனோர் காணப்படுவதனால் அவர்களுக்கான இத் திட்டத்தினை ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை முன்னெடுத்து.

ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை பிரிவுக்குள்ள 39 கிராம சேவகர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 120  வறிய நிலையில் உள்ள விசேட தேவையுடையவர்களுக்கு இந்த உதவி பிரதேச சபை நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது .

3 இலட்சம் ரூபா பிரதேச சபை நிதியில் இருந்து ஒருவருக்கு தலா 2500.00 ரூபா பெறுமதியான  அன்றாடத் தேவையான பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையில்  தவிசாளர் நாகமணி கதிரவேல் தலையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் சபை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.