கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் "டெங்கு அற்ற நகரை உருவாக்குவோம்" நடைபவணி

(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் ஏற்பாட்டில் டெங்கு அற்ற நாட்டை கட்டியெழுப்புவோம்" ; 'டெங்கு பரவுவதை தடுப்போம்" எனும் விழிப்புணர்வு நடைபவணியும், மட்டு நகர் சுற்றுச்சூழலை தூய்மையாக்கல் வேலைத்திட்டமும் இடம்பெற்றது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் "தூய்மையான நகரையும், நாட்டையையும் உருவாக்குவோம்"  எனும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் 2006ஆம் ஆண்டு பழைய மாணவர்களும்,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து மட்டக்களப்பு நகரில் "டெங்கு அற்ற நாட்டை கட்டியெழுப்புவோம்" ; 'டெங்கு பரவுவதை தடுப்போம்" எனும் விழிப்புணர்வு நடைபவணியும், மட்டு நகர் சுற்றுச்சூழலை தூய்மையாக்கல் வேலைத்திட்டமும் இன்று வெள்ளிக்கிழமை(10.1.2029) காலை 9.00 மணியளவில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி முன்பாக கல்லூரியின் முதல்வர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.

இவ்விழிப்புணர்வு நடைபவணியில் பிரதியதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,2006ஆம் வருட மாணவர்கள்,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,பொலிசார்,கலந்து கொண்டு "டெங்கு அற்ற நகரை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும்,"டெங்கற்ற சூழலாக வைத்திருப்போம்" எனும் தொனிப்பொருளில் ஸ்ரீக்கர் பொதுவிடங்களிலும்,தனியார் வீடுகளிலும் ஒட்டப்பட்டும்,நடைபவணியும் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி முன்பாக ஆரம்பமாகியும்,நடைபவணியும் நகர்புற வீதிகள் ஊடாக சென்று நகரின் முக்கியமான இடங்களில் விழிப்புணர்வு இடம்பெற்றது.