மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

வெல்லாவெளி அருள் மிகு முத்துமாரியம்மன் ஆலய திருவாதிரை தீர்த்த உற்சவம்

 (எஸ்.நவா)
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க வெல்லாவெளி அருள் மிகு முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று காலை (10) பிரதம குரு சிவஸ்ரீ சாம்பசிவம் குருக்கள் அவர்களினால் மிகவும் சிறப்பாக பக்தி பரவசத்துடன் இடம்பெற்றது.
காலை 7.30மணியளவில் திருவெம்பாவை பாடல் பாடி சுண்ணம்; இடிக்கப்பட்டு  வசந்த மண்டபத்திலிருந்து பூஜை நடைபெற்று சிவனும் சக்தியும் எருது வாகனத்தில் பக்தி பரவசத்துடன் ஆடல் பாடலுடன் மட்டக்களப்பு வாவியில் இணையும் நாதனை ஆற்றில் ஏராளமான அடியார்கள் புடைசூழ தீர்த்த உற்சவம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.