மாணவர்கள் தேசிய ரீதியில் சாதனைகள் நிலைநாட்ட வேண்டும்.



மாணவர்களின் சாதனைகள் தேசிய ரீதியில் அதிகரிக்கவும் நிலைநாட்டப்படவும் வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குறுமன்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்திற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வின் போதே இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,
பட்டிருப்பு கல்வி வலயம் மாகாண மட்ட விளையாட்டு போட்டிகளில் கடந்த 2018ம் ஆண்டு முதல் இடத்தினையும், 2019ம் ஆண்டு இரண்டாம் இடத்தினையும் தக்க வைத்தது.

ஆனால் தேசிய ரீதியில் பிரகாசிக்க தவறுகின்றனர். ஓரிரு மாணவர்கள் தான் தேசிய ரீதியில் சாதனை படைக்கின்றனர். இந்நிலை அதிகரிக்க வேண்டும்.
பாதணிகள், சீருடைகள், பயிற்சியாளர்கள் மற்றும் சத்துணவு போன்ற வளங்களை வீரர்களுக்காக பெற்றுக்கொடுக்கப்படவும் வேண்டும். அப்போதுதான் அவர்கள் சரியான இலக்கினை அடைவதற்கு உந்துசக்தியாக அமையும்.,

கடந்தகாலங்களில் எமது அமைப்பினால் பட்டிருப்பு கல்வி வலய மாணவர்களுக்கு சீருடை மற்றும் சில பாடசாலைகளுக்கு போக்குவரத்துக்கான பகுதியளவிலும் நிதி மற்றும் ஏனைய உதவிகள் வழங்கப்ட்டது.

 மேலும் பாடசாலை மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு உதவ எமது அமைப்பு தயாராகவே இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.