மட்டக்களப்பில் விமான தயாரிப்பில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்கள் : தடுத்து நிறுத்திய புலனாய்வுத் துறை!!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்திற்கு பின் தமிழ் இளைஞர்கள் சிலர் சேர்ந்து சிறிய ரக விமானம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது அதனை இலங்கை புலனாய்வு துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் 2013ஆம் ஆண்டு செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த தமிழ் இளைஞர் விமான தயாரிப்பு பொறியியல் கற்கை நெறியை மேற்கொண்டு மோட்டார் சைக்கிள் என்ஜின்களை பயன்படுத்தி உலகின் மிக சிறிய விமானம் ஒன்றை தயாரிக்க முனைந்தபோது அதை இராணுவத்தினர் சுற்றி வளைத்து பிடித்து தடுத்து நிறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் குறித்த விமான தயாரிப்பில் ஈடுபட்ட டிலுக்சியன், யருசன் என்பவர்கள் இராணுவத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விமானம் தயாரிக்கப்பட்டிருந்தால் விடுதலைப் புலிகளுக்கு பின்னர் இலங்கையின் சிறிய ரக விமானத்தை தயாரித்த பெருமை செங்கலடி தமிழ் இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விமான தயாரிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளனர் 

இது தொடர்பாக தற்போது புலனாய்வுத் துறையினர் சில இளைஞர்களை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுளதாக மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.